Monday, June 8, 2009

வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகள்

தமிழ் வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகளை விளக்கி சென்னையில் சூன் 13, 2009 அன்று ஒரு கூட்டம் நடைபெறுகிறது.

நாள்: சூன் 13, 2009 சனிக்கிழமை மாலை 6 மணி.
இடம்: கிழக்குப் பதிப்பகம் மொட்டை மாடி
முகவரி: New Horizon media, எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018

விவரங்களுக்கு விக்கிப்பீடியாவுக்கு வலைப்பதிவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்புகள் பார்க்கவும்.

அனைத்து தமிழ் வலைப்பதிவர்கள், தமிழ் விக்கிப்பீடியர்களை வரவேற்கிறோம்.

நிகழ்வு குறித்து அறிவிக்க உதவிய தமிழ்மணம், திரட்டி, சங்கமம் நிருவாகத்தினருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

5 comments:

butterfly Surya said...

தகவலுக்கு நன்றி.

மறைமலை இலக்குவனார் said...

அதே நாளில் நான் பெரியார் திடலில் ஒரு கருத்தரங்கு செல்லவேண்டியுள்ளது.(ஏல் பல்கலைப் பேராசிரியர்
பெர்னார்டு உரையாற்றுகிறார்.நான் அறிமுகவுரை நிகழ்த்த வேண்டும்,)இக்கூட்டத்தின் நிகழ்வுகளை எனக்குத் தெரிவிக்கவும்,அடுத்த கூட்டம் பற்றி அறிவிக்கவும் இயலுமாயின் நன்றி.
மறைமலை இலக்குவனார்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நிகழ்வு முடிந்த பின் கண்டிப்பாக குறிப்புகளைப் பகிர்கிறோம். அடுத்த கூட்டத்துக்கும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நன்றி

குழலி / Kuzhali said...

ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ள விக்கிபீடியாவை ஏன் நான் ஆதரிப்பதில்லை http://kuzhali.blogspot.com/2009/06/tami-wikipedia.html

ஞானவெட்டியான் said...

அன்பு நண்பர் நற்கீரன்,
வணக்கம். அழைப்புக்கு நன்றி.
ஒரு இடுகை இட்டால், "இதற்கு ஆதாரம் என்ன? எங்கே இருக்கிறது? ஆகவே அனுமதிக்க இயலாது" போன்ற வினாக்களால் மனம் நொந்து விட்டவன் யான்.
என்னுடைய 68ம் அகவையில் எவ்வளவு இன்னல்பட்டு ஒரு இடுகையை இடவியலும் என எண்ணிப்பார்க்கவும்.
"ஞானம்" என்னும் தலைப்பில் எழுதும்பொழுது "வாசி" என்பதற்கு ஆதாரம் கேட்டால் எப்படி விளக்குவது. நண்பர் நற்கீரனுக்குத் தெரியும் எவ்வளவு கடினம் என.
மீறி ஏதாகிலும் விளக்கமீந்தால் இது தங்களின் சொந்தக் கருத்து. ஆகவே அனுமதிக்க இயலாது என மறுதலிப்பு.
இக்கசப்பான அனுபவங்களால் எனக்கு இழப்பு இல்லை. பின்னர் வரப்போகும் இளைய தலைமுறைக்குத்தான் இழப்பு.
"யாருக்கு இழப்பு வந்தால் எனக்கு என்ன" எனும் எண்ணம் மாறவேண்டும்.

Post a Comment