பதிவர்கள் தமிழ்விக்கிப்பீடியாவுக்கு எப்படிப் பங்களிக்கலாம்?
தமிழில் வலைபதியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் நாளுக்குப் பத்து நிமிடங்கள் தமிழ் விக்கிக்குப் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கியில் பெருமளவு முன்னேறத்தை ஏற்படுத்தலாம். அத்தகைய சில யோசனைகள் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.
நாளுக்கு ஏதேனும் ஒரு கட்டுரையைப் படித்து அவற்றில் எழுத்துப் பிழைகளைத் திருத்தலாம். கருத்துப் பிழைகளை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் சுட்டிக்காட்டலாம். பதிவர்களில் கிட்டத்தட்ட தமிழகத்தின் ஈழத்தின் எல்லாப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.இவர்கள் தங்கள் ஊர், சுற்றியுள்ள பகுதிகள், அங்குள்ள குறிப்பிடத்தக்க இடங்கள், குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைப் பற்றி விக்கியில் சேர்க்கலாம் (புதிய கட்டுரைகள் எனில் 3-5 வரி என்பது கூட நல்ல தொடக்கம்). ஏற்கனவே கட்டுரை இருப்பின் ஓரிரு வரிகள் புதிதாகச் சேர்க்கலாம். தாங்கள் எழுதும் வலைப்பதிவுகளில் வரும் ஊர், பொருள் முதலானவற்றிற்கு விக்கி இணைப்புத் தரலாம். தாங்கள் இணையத்தில் படித்த நல்ல கட்டுரைகளை வெளி இணைப்பாக பொருத்தமான விக்கி கட்டுரைகளில் தரலாம்.
பல விக்கி கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் கட்டுரை தொடர்பான கருத்துகள், சொற்பயன்பாடு, எழுத்துப் பயன்பாடு முதலிய உரையாடல்கள் நடைபெறும். அவற்றைப் படித்து கருத்துக்களைப் பரிமாறலாம்.தாங்கள் தமிழில் இருக்க வேண்டும் என நினைக்கும் தங்களுக்குப் பிடித்த தலைப்புகள், மக்களுக்குப் பயன்படும் என நினைக்கும் தலைப்புகளைப் பட்டியல் இடலாம் (கட்டுரை எழுதவியலா விட்டால்). இதனால் மற்ற கட்டுரையாளர்கள் இக்கட்டுரைகளை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ் விக்கியின் பயன்பாடு மிகும். புகைப்படம் எடுப்பவர்கள் எனில் தங்கள் ஊர் சார்ந்த புகைப்படங்கள், தங்கள் ஊரில் உள்ள சிறப்பு இடங்கள், பொருட்களைப் பற்றிய படங்களையும் இணைக்கலாம். துறைசார் வல்லுனர்கள் விக்கித்திட்டங்கள் எனப்படும் ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்த கட்டுரைகளை மேம்படுத்தலாம்.
கட்டுரையாக்கம் தவிர்த்த மற்ற பணிகள்.
கட்டுரையாக்கம் தவிர்த்த மற்ற பணிகள்.
- கட்டுரைகளுக்குப் பொருத்தமான தொடுப்புகளைச் சேர்த்தல்.
- வலைப்பதிவுகளில் புழக்கமாக உள்ள சொற்களை விக்சனரியில் சேர்த்தல்.
- பகுப்பு:தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள்
- நிரலாக்கம் (தமிழ் தட்டச்சை விக்கியில் ஏதுவாக்கல்)
- தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள் ஒழுங்கமைத்து நடத்துதல்
- அனுமதி பெறப்பட்ட பிறரின் கட்டுரைகளைப் பதிவேற்றல்
- வேறு ஏதேனும் யோசனைகள் இருப்பின் இந்தப் பக்கத்தில் சேர்க்கலாம் :)
தமிழ் விக்கிப்பீடியாவைக் காட்டிலும் செயல்பாடு குறைவான மற்ற விக்கித்தளங்கள் உள்ளன. இவற்றிலும் பதிவர்களுக்கு ஆர்வம் இருக்கலாம். விக்கிமீடியாவின் மற்ற திட்டங்களில் பங்களித்தல்:
* விக்சனரி - விக்சனரியில் தற்போது ஏறத்தாழ ஒரு இலட்சம் சொற்கள் உள்ளன. புதிய சொற்களைச் சேர்த்தல், இருக்கும் சொற்களை தமது எழுத்துக்களில் பயன்படுத்தல், தம் கட்டுரைகளில் உள்ள சில அரிய சொற்களுக்கு விகசனரி இணைப்புக் கொடுத்தல் ஆகியன எளிதாக செய்யக்கூடியவை.
* விக்சனரி - விக்சனரியில் தற்போது ஏறத்தாழ ஒரு இலட்சம் சொற்கள் உள்ளன. புதிய சொற்களைச் சேர்த்தல், இருக்கும் சொற்களை தமது எழுத்துக்களில் பயன்படுத்தல், தம் கட்டுரைகளில் உள்ள சில அரிய சொற்களுக்கு விகசனரி இணைப்புக் கொடுத்தல் ஆகியன எளிதாக செய்யக்கூடியவை.
* விக்கி மேற்கோள்கள் - தங்களுக்குப் பிடித்த அறிஞர்களின் மேற்கோள்களைத் தமிழில் தரலாம்.
* விக்கி செய்திகள் - தற்போது தமிழ் விக்கியின் செயல்பாடு ஒரே ஒரு விக்கிப்பீடியா பயனரின் தொடர் உழைப்பினால் சீராக வளர்ந்து வருகிறது. வலைப்பதிவர்கள் தாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை நம்பத்தகுத்த மூலங்களின் துணையோடு உருவாக்கலாம்.
* விக்கி நூல்கள் - இதில் தமிழ் விக்கிப்பீடியாவை விட எழுத்துநடைக்கு கூடிய சுதந்திரம் உண்டு.தாங்கள் விரும்பும் தலைப்புகளில், தாங்கள் தேர்ச்சி பெற்ற துறைகளில் புதிய நூல்களை ஆக்கலாம்.
* விக்கி மூலங்கள் - காப்புரிமையற்ற பிறரது ஆக்கங்கள் இங்கு இடம்பெறத் தக்கவை. எடுத்துக்காட்டாக சங்க இலக்கியங்கள் இதில் சேர்க்கப் படலாம். காப்புரிமையற்ற தலைவர்களின் உரைகள்,கட்டுரைகளும் சேர்க்கலாம்.
இவற்றைத் தவிர வேறு யோசனைகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள். பயன் பெருகும்.
2 comments:
பல நாட்களாக தமிழ் விக்கிபீடியாவின் விரிவாக்கத்தில் எப்படி பங்கு கொள்வது என்று தெரியாமல் இருந்தேன்.உங்கள் கட்டுரைகள் மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். மேலும் ஐயம் இருப்பின் உங்களை தொடர்பு கொள்கிறேன்.
பயனுள்ள கட்டுரை சிவா. விக்கி என்றாலே கட்டுரை எழுதுவது தானா என்று சிலர் மலைக்கிறார்கள். சரியான புரிதலைத் தர இக்கட்டுரை உதவும்.
**
பதிவர்கள் மீடியாவிக்கி தமிழாக்கத்தில் உதவலாம்.
**
நிறைய பதிவர்கள் மென்பொருள் துறையில் இருப்பதால், விக்கி நிரல்கள், தானியங்கிகள் உருவாக்கத்திலும் உதவலாம்.
Post a Comment