விக்கிப்பீடியாவில் கட்டுரைப் போட்டி
இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கிடையே வரலாற்றில் இல்லாத விறுவிறுப்பான போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஜனவரி 10 2020 வரை நடைபெறும் போட்டியில் சுமார் மூன்று வாரம் கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா முதலிடத்தைத் தக்கவைத்து முன்னேறிக் கொண்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டைப் போல கடைசி நேரத்தில் வெற்றியைத் தட்டிப்பறிக்கும் பிற மொழி விக்கிப்பீடியாக்களும் தமிழைத் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன. ஆர்வமுடையவர்கள் வந்து விக்கிப்பீடியாவில் எழுதித் தோள் கொடுக்கலாம்,
Languages | Articles | Participants | Links |
---|---|---|---|
Tamil | 1531 | 47 | Fountain |
Punjabi(Gurmukhi) | 872 | 31 | Fountain |
Urdu | 800 | 23 | Fountain |
Bengali | 796 | 29 | Fountain |
Punjabi(Shahmukhi) | 548 | 2 | Fountain |
Santali | 302 | 8 | Fountain |
Hindi | 301 | 18 | Fountain |
Malayalam | 161 | 7 | Fountain |
Assamese | 150 | 15 | Fountain |
Gujarati | 113 | 6 | Fountain |
Telugu | 112 | 5 | Fountain |
Odia | 97 | 4 | Fountain |
Marathi | 70 | 10 | Fountain |
Kannada | 26 | 6 | Fountain |
Tulu | 26 | 5 | Fountain |
Sanskrit | 9 | 4 | Fountain |
என்ன போட்டி?
சுருக்கமாகச் சொன்னால், கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் விக்கிப்பீடியா நடையில் முன்னூறு வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும். அது தான் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி
எப்படி எழுத? தெரியாதே!
இந்தக் காணொளிகளைப் பார்க்கலாம். இந்த ஆவணங்களைப் படிக்கலாம். கூடுதல் சந்தேகங்களுக்கு ஒத்தாசைப் பக்கம், வாட்சப் குழு அல்லது பேஸ்புக் குழுவில் கூடக் கேட்கலாம்.
பரிசு உண்டா?
அதிகக் கட்டுரை எழுதியவர்களுக்கு மட்டும் பரிசு நிச்சயம், தமிழ் விக்கிப்பீடியா குமுகமாக வென்று அனைவருக்கும் பரிசைப் பெற்றுத்தருவது லட்சியம்.
வேறு ஏதாவது உண்டா?
இந்த செய்தி பிடித்திருந்தால் மற்றவர்களுடன் ஷேர் செய்யுங்கள், மறக்காமல் கட்டுரை எழுதி ஸ்கோர் செய்யுங்கள்.
சென்னையில் தொடர்தொகுப்பு நிகழ்வு - நவம்பர் 10 2019 வேளச்சேரி
மதுரையில் தொடர்தொகுப்பு நிகழ்வு நவம்பர் 30 2019 மன்னர் கல்லூரி
சென்னையில் தொடர்தொகுப்பு நிகழ்வு - டிசம்பர் 15 2019 நடக்கவுள்ளது. முன்பதிவுபடிவம்
4 comments:
நல்ல தகவல். நன்றி நண்பரே.
நன்றி அன்பரே. முயற்சிக்கிறேன்.
ஞாயிறு கிழமை நடக்கும் இடம் பற்றிய தகவல் தெரியவில்லை
நாள்: டிசம்பர் 15 2019 (ஞாயிறு)
நேரம் – காலை 9.00 – மாலை 4.00 (இதற்கிடையேயும் வரலாம்)
இடம் : சென்னை லயோலா கல்லூரி
அனுமதி இலவசம்
முன்பதிவு அவசியம். https://forms.gle/TboqjL5Zb4TpMRxY7
Post a Comment