தமிழ் விக்கிப்பீடியாவில் எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியத்தை ஆக்குவதே எமது முதன்மைக் குறிக்கோள். அதற்கமைய பல்வேறு துறை சார் தகவல்களை சேர்த்து வருகிறோம். தமிழ் தமிழர் பற்றிய தகவல்களும் அவற்றுள் அடங்கும். அனேகமான கட்டுரைகள் ஒரு தொடக்க நிலையிலேயே உள்ளன. அக்கட்டுரைகளை மேம்படுத்த உங்கள் அனைவரின் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. உங்களின் கருத்துக்களை இங்கேயும் தெரிவிக்கலாம்.
தமிழர் பற்றிய பகுப்பு:
http://ta.wikipedia.org/wiki/பகுப்பு:தமிழர்
தமிழர் பற்றிய கட்டுரை:
http://ta.wikipedia.org/wiki/தமிழர்
தமிழர்
திராவிட மொழிக் குடும்பத்தில் முக்கிய மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர் (Tamils,Tamilians) எனப்படுகிறார்கள். தமிழர்கள் ஏறத்தாழ 2000 ஆண்டுகள் எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தென்னாசிய இனக்குழுவொன்றைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் எனினும், அவர்களில் பெரும்பாலானவர்களுடைய தாயகம் தென்னிந்தியாவேயாகும். இலங்கையிலும் வடக்கு, கிழக்குப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டு ஏறத்தாழ 25 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இலங்கையின் மத்திய பகுதியிலும், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து, பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்துவதற்காக அழைத்துவரப்பட்ட மேலும் பல லட்சம் பேர் உள்ளார்கள். இவர்களை விட இதே காலக்கட்டத்தில், தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள், மலாயா (இன்றைய மலேஷியா), சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் குடியேறினார்கள். பர்மாவிலும், மொரிசியசு, மடகாஸ்கர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் தமிழர்கள் பிரித்தானியாவுக்கும் சென்றுள்ளார்கள். அண்மைக்காலங்களில் விசேடமாகப் பெருமளவு இலங்கைத் தமிழர்கள் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் வாழ்கிறார்கள்.
நற்கீரன், நான் அவ்வப்போது எழுதும் அறிவியல் தொடர்பான இடுகைகளை விக்கிபீடியாவில் சேர்க்கும் ஆவலிருக்கிறது. தகவல்களை உள்ளிட முன்பொருமுறை முயன்று வெற்றி கிட்டாததால் அப்படியே விட்டுவிட்டேன். அதுகுறித்த வினா-விடை மாதிரியான உதவிகள் கிடைக்கும்தானே? அந்தப் பக்கங்களின் சுட்டிகளை அறியத் தரவும்.
ReplyDeleteநன்றி.