தமிழ் விக்கிப்பீடியா 16000 கட்டுரைகளை விரைவில் எட்டிவிடும். ஆங்கிலத்தில் 2600000 கட்டுரைகளுக்கு மேலே உண்டு. அப்படி பாக்கையில் தமிழ் ஒரு துளிதான். ஆங்கிலம் தவிர்த்து மற்ற 22 மொழிகளில் 100 000 மேலே கட்டுரைகள் உண்டு. இவற்றுள் சீனம், ஜப்பானிஸ் தவிர்த்து மற்ற எல்லாம் ஐரோப்பிய மொழிகளே.
இந்திய மொழிகளில் கட்டுரை எண்ணிக்கையில் தெலுங்கு, இந்தி, மாராத்தி 20000 கட்டுரைகளுக்கு மேலே கொண்ண்டுள்ளன. தரத்தில் மலையாளம், தமிழ் விக்கிகள் சிறப்பு.
பேசும் மக்கள் தொகை அடிப்படையிலும், மொழியின் விருத்தி அடிப்படையிலும் தமிழ் முதல் 15மொழிகளில் ஒன்று எனலாம். 6000 மேற்பட்ட மொழிகள் வழங்கும் இன்றைய சூழலில் அது ஒரு நல்ல நிலையே. அப்படி இருந்தும் தமிழ் விக்கிப்பீடியா 67 நிலையில் இருப்பது கவனத்துக்குரியது. ஏன் என்று பார்த்தால் தமிழ் இணையம் இன்னும் விரிவாக தமிழ் சமூகத்திடம் செல்ல வில்லை என்பது ஒர் அடிப்படைக் காரணம். அது தவிர்த்து தமிழ் விக்கிப்பீடியா பற்றி தமிழ் இணையச் சமூகம் இன்னும் முற்றிலும் விளங்கிக் கொள்ளவில்லை. மற்றொரு காரணம் தமிழ் பற்று ஆர்வம் மிகுந்த பலர் "வாய் சொல்லில் வீரர்" ஆக மட்டும் இருப்பது.
தமிழ் பல சிறப்புகளைக் கொண்டிருந்தாலும், அதன் பெரும் குறை அறிவியல் தொழில்நுட்ப விடயங்களைப் பகிர்வது கடினம் எனபதாகும். இது வரைக்கும் தமிழ் அறிஞர் சில நூறாயிரம் சொற்களை ஆக்கி உள்ளார்கள். ஆனால் அந்த சொற்கள் கருத்து சூழலில் பெரிதாக பயன்படுத்தப்படவில்லை. கருத்து தொடர்புள்ள சொற்களை மீயிணைப்பு மூலம் இணைத்து பல துறை சார் கருத்து விரிவாக்கம் தமிழ் விக்கிப்பீடியாவில் எளிது. மேலும் தமிழ்நாட்டு கலைச்சொற்களுக்கும், இலங்கை கலைச்சொற்களுக்கு சில வேறுபாடுகள் உண்டு. இந்தக் குறையை தீர்க்க தமிழ் விக்கிப்பீடியா ஓர் அரிய களம்.
இது முற்றிலும் ஒரு புலமைசார் களம் இல்லை. யாரும் இணையலாம். யாரும் அவருக்கு ஏற்ற நேரத்தில், ஈடுபாடு கொண்ட துறையில், இணையம் மூலம் பங்களிக்கலாம். அனைவருக்கும் நல்வரவு.
தமிழ் அறிவியல் வளர்ச்சியிலும், தமிழ் விக்கிப்பீடியா விற்கான பங்களிப்பு பற்றியுமான உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. நானும் ஏதாவது செய்யலாம் என ஒரு முறை முயன்றபோது அது சரிவரவில்லை. நண்பர் சசிதரன் உதவுவதாகக் கூறியுள்ளார்.முடிகிறதா பார்ப்போம்.
ReplyDelete