தமிழ் விக்கிப்பீடியா விக்கிபீடியாவில் கூகிள் மொழிபெயர்ப்பு கருவி கொண்டு பதிவிடல்
விக்கிபீடியாவில் ஆங்கில பக்கங்களை தமிழில் மொழிப்பெயர்த்து எழுதுவோர்க்கான பதிவு . தற்போது கூகிள் நிறுவனம் மொழிபெயர்ப்பு செய்வதற்கான ஒரு மென்பொருள் தன்னை வெளியிட்டு உள்ளது . இது பெரும்பாலோனோருக்கு தெரிந்தது தான் . இந்த மொழிபெயர்ப்பு கருவிஇன உதவியுடன் முதலில் தமிழ் விக்கிபீடியாவில் எழுதியவர் திரு.wikitrans . அவ்வாறு இந்த மொழிபெயர்ப்பு கருவியை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம் .
இதனால் நமது பெரும் அளவில் நன்மை உள்ளதாக இருக்கிறது . Google indic transileration என்ற மென்பொருளை போலவே இந்த Google Translator Toolkit என்ற மென்பொருளும் பயன்படுத்துவோர்களின் திருத்தங்களை பதிவு செய்து கொண்டு எது ஏற்றது என்று அறிந்து செயல்படுமாறு உள்ளது . இந்த கருவியை பயன் படுத்துவதால் நமக்கு பின்னர் இதை பயன் படுதுவோர்களுக்கு ஏதுவாக உள்ளது .
இந்த மொழிபெயர்ப்பு கருவி பல நுட்பங்களை கொண்டுள்ளது . அவை ஒவ்வொன்றாக வருமாறு .
முதலில் , இந்த Google Translator Toolkit என்ற மென்பொருளின் முகப்பு பகுதிக்கு செல்ல http://translate.google.com/toolkit/list#translations/active என்ற தளத்திற்கு சென்று உள் நுழைந்து கொள்ள வேண்டும் .
பின்னர் அங்கே upload என்ற பொத்தானை அழுத்த வேண்டும் . பின்வரும் பக்கத்தில் நான்கு tab கள் இருக்கும் . அதில் Wikipedia article என்ற tab யை அழுத்த , வருகின்ற கட்டங்களை நிரப்ப வேண்டும் .
முதல் கட்டத்தில் , நாம் மொழிபெயர்க்கும் கட்டுரையின் பெயர் அல்லது அதன் URL யை பதிவிட வேண்டும் . URL தெரியவில்லை என்றால் . ( ஆங்கில அல்லது பிற மொழி ) விக்கி பீடியா விற்கு சென்று நீங்கள் மொழி பெயர்க்க நினைக்கும் கட்டுரையை தேர்ந்து எடுத்து பின்னர் அந்த URL யை copy செய்து paste செய்ய வேண்டும் .
பின்னர் இரண்டாவது கட்டத்தில் , அந்த கட்டுரையின் தலைப்பை மொழி பெயர்த்து எழுத வேண்டும் .
மூன்றாவது கட்டத்தில் , நீங்கள் தேர்ந்து எடுத்த ( முதல் கட்டத்தில் குறிப்பிட்ட ) கட்டுரை எந்த மொழியென்று அறிந்து , தேர்வு செய்ய வேண்டும் .
நான்காவது கட்டம் , tamil .
( sharing பற்றி பின்னர் காணலாம் ) .
பின்னர் , Upload for Translation என்ற பொத்தானை அழுத்த வேண்டும் .
இதற்கு பின்னர் தான் , நாம் தமிழாக்கம் செய்ய தொடங்க போகிறோம் .
இப்பொழுது நீங்கள் காண்பது மொழிபெயர்ப்பு மேடை . வலது (left) புறத்தில் இருப்பது நீங்கள் தேர்ந்து எடுத்த மொழியின் கட்டுரை . இடது (right) புறத்தில் இருப்பது தமிழ் மொழியில் அரைகுறையாக மொழிபெயர்க்க பட்ட கட்டுரை . நாம் இப்பொழுது முழுமையாக மொழிபெயர்க்க போகிறோம் . நாம் திருத்தங்கள் செய்வதெல்லாம் இடது புறத்தில் தான் . இந்த மேடையில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது , இடது புறத்தில் மேலே உள்ள ஒரு எண்ணிக்கையை தான் . அது எத்தனை விழுக்காடு மொழி பெயர்க்க பட்டுள்ளது என்பதனை குறிப்பிடுகிறது . பெரும்பாலும் , அனைத்து கட்டுரைகளும் 8 முதல் 12 விழுக்காடு வரை இருக்கும் . இது ஏனென்றால் , தமிழில் கூகிள் இடம் இன்னும் நல்ல அகராதி இல்லை . மேலும் , இதனை தமிழாக்கத்துக்கு பயன்படுத்தும் ஆட்கள் குறைவு . ஆகையால் , நாம் இதனை பயன்படுத்த பயன்படுத்த இந்த விழுக்காடு கூடிக்கொண்டே போகும் . உதாரணமாக , ஆங்கில கட்டுரையான rose என்ற கட்டுரையை upload செய்தீர்கள் ஆனால் , அதில் 68 விழுக்காடு இருக்கும் . இதற்கு காரணம் wikitrans என்பவர் இதனை தமிழாக்கம் செய்துவிட்டார் . இது 80 விழுக்காடில் இருந்து 68 விழுக்காடாக குறைக்க பட்டு உள்ளது . ஏனென்றால் , 12 விழுக்காடுகள் இன்னும் உறுதி செய்ய படவில்லை . இவ்வாறு நாம் தொடர்ந்து பயன்படுத்துகையில் , தமிழ் அகராதியும் , தமிழ் வாக்கிய மொழிபெயர்ப்பும் கூகிள் தானியங்கியால் அறியப்பட்டு அதனை திறம்பட மாற்றிக்கொள்ள உதவுகிறது . இதில் blog யை போலவே கூட்டு சேர்ந்து மொழி பெயர்க்கலாம் . ஒருவர் மொழியர்த்த வாக்கியங்களை , உடனே நாம் பார்த்து கொள்ளலாம் . ஏற்கனவே இந்த வாக்கியத்தை ஒருவர் மொழிப்பெயர்த்திருந்தால் , அதனை இந்த கருவி பரிந்துரைக்கும் . நீங்கள் மொழி பெயர்த்த வாக்கியம் அல்லது சொல் மற்றவர்களால் காண முடியும் . இவ்வாறு நாம் அனைவரும் ஒருவகையில் மொழி பெயர்க்கவும் , மற்றவர்களுக்கு உதவவும் முடியும் .
இதனால் , இன்று gmail , hotmail போன்ற மின்னஞ்சல் களில் வேறு மொழியில் வந்த செய்தியை படிக்க மொழி பெயர்ப்பு கருவி இருக்கிறது அல்லவா ? அதில் தமிழ் மொழியும் இடம் பெரும் . நாம் இணைந்து செயல் படுவதினாலும் , கூகிள் இன் செயல் பாட்டினாலும் தான் இது சாத்தியம் ஆகும் .
பின்னர் Google toolbar , என்ற மென்பொருளை பயன்படுத்தி , எந்த ஒரு இணையத்தளத்திலும் உள்ள எந்த ஒரு சொல்லையும் , தமிழ் மொழியில் பொருள் விளக்கம் அறிந்து கொள்ள முடியும் .
இன்னும் எத்தனையோ பயன் பாடுகள் உள்ளது . எல்லாமே இந்த கருவியை பயன்படுத்தினால் மட்டுமே சாத்தியம் . பின்னர் என்னதான் நாம் முக்கினாலும் , ஆங்கில விக்கி யை பிடிக்க முடியாது . ஆனால் ஆங்கில விக்கியை விட வேகமாக பதிவிட முடியும் . எல்லாமே இந்த Google traslator toolkit தான் உள்ளது .
இப்போதான் நான் தொடங்கி உள்ளேன் . இன்னும் இதன் பயன் பாடுகள் நிறைய உள்ளன . அதற்கு முன் , 90 விழுக்காடுகளுக்கு மேல் மொழி பெயர்த்த பின்னர் என்பதனை பார்ப்போம் . அது ஒரு நொடியில் நடந்து ஏறிவிடும் . மொழியாக்க மேடையில் , இடது புறத்தின் மேலே Share என்ற பொத்தானில் உள்ள Publish to Source Page என்பதை அழுத்தினால் போதும் . தமிழ் விக்கி ப்பீடியாவிற்கு தானே சென்று விடும் .
கருவிகள்
நாம் இப்பொழுது Google Translator Toolkit என்ற மென்பொருளின் கருவிகளை பற்றி தெரிந்து கொள்வோம் .
இந்த மென்பொருளானது பயனர்களுக்கு ஏற்றாற்போல் சில நுட்பமான கருவிகளை தந்தளிக்கின்றது . இதனை பயன்படுத்த நாம் முதலில் இடது புறத்தின் மேலே உள்ள Show Toolkit என்ற பொத்தானை அழுத்தி வைத்திருக்க வேண்டும் . அவ்வாறு அழுத்துகையில் , நமது மொழியாக்க மேடையில் கீழ் புறத்தில் ஒரு கருவிப் பகுதி தோன்றும் . இந்த பகுதியில் நான்கு tab கள் இருக்கும் . அவை ,
1. Translation Search Results
2. Computer Translation
3. Glossary (0)
4. Dictionary
1. Translation Search Results :
இதை பற்றி தெரிந்து கொள்ளவதற்கு முதலில் ஒரு அடிப்படையை தெரிந்து கொள்வது அவசியம் . அதாவது , நான் முன்பே கூறியுள்ள படியே , நாம் இந்த மொழியாக்க மேடையில் திருத்தம் செய்வது எப்பொழுதும் இடது பக்கத்தில் மட்டுமே . வலது பக்கத்தில் திருத்தம் செய்வது இயலாது . மேலும் , அவ்வாறு இடது புறத்தில் திருத்தங்கள் அல்லது மொழிப்பெயர்ப்பு செய்வதாயினும் , அது ஒவ்வொரு வரியாகத்தான் மொழியாக்கம் செய்ய இயலும் . இதன் படி , இடது புறத்தில் நீங்கள் திருத்தம் செய்யும் வரிகளை சுற்றி ஒரு சாளரம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் . அதே போன்று , நீங்கள் மொழியாக்கம் செய்யும் வரிக்கு இணையான ஆங்கில மற்றும் பிறமொழியின் வலது புற வரிகள் மஞ்சள் நிறத்தில் காட்ட பட்டிருக்கும் . இது பயனர்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய அடிப்படையாகும் . ( தமிழில் எழுத இடது புறத்தின் மேலே உள்ள அ என்ற பொத்தானை அழுத்தி இருக்க வேண்டும் ) .
இப்பொழுது நாம் Translation Search Results என்ற கருவியை பயன்படுத்தும் முறைகளை காண்போம். இது ஒரு தேடல் கருவி . இது தானாகவே தேடிக்கொண்டு காண்பிக்கும் கருவியாகும் . இது , இடது புறத்தில் உள்ள வரிகளில் எந்த வரிகளை நாம் தேர்ந்து எடுத்திருக்கிறோமோ அந்த வரிகளை கொண்டு தேடும் கருவி . இது முன்பு யாரேனும் இதே வாக்கியத்தையோ அல்லது ஒரு சொற்களையோ மொழியாக்கம் செய்திருந்தால் அதனை தேடி கொண்டு வந்து காண்பிக்கும் . நீங்கள் மொழியாக்கம் செய்ததினையும் காண்பிக்கும் . அவ்வாறு கண்டறிந்த தேடல்கள் ஒவ்வொன்றிக்கும் கீழே Use Translation என்ற பொத்தான் இருக்கும் . அந்த மொழியாக்கம் சரியானதாக இருந்தால் அந்த பொத்தானை அழுத்தி அதை பயன்படுத்திக் கொள்ளலாம் . ஒரு சொல்லாக இருந்தால் copy paste செய்து கொள்ளலாம் .
2. Computer Translation
இது தானியங்கியல் மொழிபெயர்க்க படுபவை . இவை கூகிள் வைத்திருக்கும் தானியங்கியால் மொழிபெயர்த்தவை . இது பயனர்கள் மொழி பெயர்த்த எதனையும் சார்ந்திருக்காது .
3. Glossary (0)
இதுதான் நமது களஞ்சியம் . கூகிள் நிறுவனம் பயனர்கள் வசதிக்கேற்ப இந்த Glossary என்ற இணைப்பை உருவாக்கியுள்ளது . இதனால் நாம் ஏதேனும் technical terms பதிவுசெய்து கொள்ளலாம் . இதன் பின்னொட்டாக சுழியம் என்ற எண்ணிக்கை இருக்கும் . இந்த எண்ணிக்கை நமது சொற்க் களஞ்சியத்தில் இருந்து எத்தனை சொற்கள் அல்லது வாக்கியம் பொருந்துகிறது என்பதாகும் . இதனால் நாம் மொழிபெயர்ப்பு செய்திடுகையில் உடனடியாக நாம் குறிப்பினை பார்த்துக்கொள்ளலாம் . நாம் இங்கே நமது wikkionary சேர்த்து வைத்தால் மொழிபெயர்க்கும் பொழுது தமிழ் வார்த்தை தேடல் என்பதை முற்றிலும் தவிர்க்கலாம் . நமது தமிழ் சொற்க் களஞ்சியத்தை .csv கோப்பையாக excel உருவாக்கி சேர்க்கலாம் .
4. Dictionary
இவை கூகிள் அகராதியில் இருந்து பொருந்தும் சொற்களை காண்ப்பிக்கும் பகுதி . இந்த அகராதி தற்போது கூகிள் நிறுவனம் தனி வழியாகவே வெளியிட்டு உள்ளது .