பலரும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பு செய்யவேண்டும் என்பதை பேசுவதில் முன் நிற்கிறார்கள். பேசும் அளவிற்கு செயல் வடிவம் பெறுவதில்லை. எடுத்துக்காட்டாக 2008.02.21 அன்று உலக தாய்மொழி நாள் நிகழ்வாக சென்னையில் ஆழி பதிப்பகம் செந்தில்நாதன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். இதில் சென்னையில் உள்ள பல தமிழ் இணைய ஆர்வலர்களும் பத்திரிகையாளர்களும் வலைப்பதிவாளர்களுமாக ஒரு 50பேர் கலந்துகொண்டனர். கணித்தமிழ்ச் சங்கம் ஆன்டோ பீட்டர், வலைப்பதிவாளர் மா.சிவகுமார், மக்கள் தொலைக்காட்சி கஜேந்திரன், ஆனந்தவிகடன் திருமாவேலன் என்று சிலரை ஞாபகம் உள்ளது. இதில் அடுத்த ஒரு வருடத்திற்குள் 10000 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவில் இணைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது.
வந்திருந்த எல்லோரிடமும் மின்-அஞ்சல் முகவரி வாங்கினார்கள், ஒரு மின்-மடல் குழுமம் ஆரம்பித்து தொடர்பு கொள்வதாக சொன்னார்கள். இன்றுவரை என்ன நடந்துள்ளது என்று தெரியவில்லை.
ஆழி பதிப்பகம் செந்தில்நாதன், கிழக்குப் பதிப்பகம் பத்ரி போன்றவகளிடம் அவர்கள் துறை சார்ந்த, தவிர்க்க முடியாத 1000 சிறந்த தமிழ் எழுத்தாளர்கள், அல்லது தமிழில் மிகச் சிறந்த 1000 புத்தகங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து, கட்டுரைகளாகத் தட்டச்சு செய்து தரும்படி கேட்கலாம். குறுந்தகட்டில் இதனைப் பெற்று தமிழ் விக்கிப்பீடியாவில் இணைக்கலாம்.
இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் அத்துறை சார்ந்தவர்களின் ஒத்துழைப்புடன், ஸ்பான்சருடன் கட்டுரைகளைக் குறுந்தகட்டில் பெற்று விக்கிப்பீடியாவில் இணைத்தால் அதிக கட்டுரைகளை விரைவாக இணைப்பதற்கான வழியாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகிகள் என்ற பெயரில் சில புல்லுருவிகள் அட்டகாசம் தாளமுடியவில்லையாமே. புதியத் தமிழ் கற்று கொடுக்கின்றார்களா. இதற்கு ஒரு தலைவர் கனடாவில் இருந்து செயல்படுகின்றாராமே. நீங்கள் ஆங்கிலத்தில் பொழைப்பு நடத்துபவர்கள் தான் இந்த வேலையெல்லாம் செய்கின்றார்கள் என்று சொல்லப்படுகின்றதே. குரூப் பாலிட்டிக்ஸ் வேறு நடக்கின்றதாமே? இவ்வளவையும் தாண்டி தமிழர்களின் உழைப்பை திருடுகின்றீர்களா. நீங்கள் பேர் எடுக்க?
6 comments:
பயிற்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்! :)
நன்றி, திரு.

உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
வாழ்த்துகளுக்கு நன்றி, விருபா.
அனைவரின் நோக்கமும் நல்லதே. அது செயல்வடிவம் பெறுவதில் உள்ள தடைகளை உணர்ந்தே இருக்கிறோம்.
தங்கள் யோசனை சிறப்பானது. இது தொடர்பில் முயற்சி எடுக்கிறோம்.
சூன் 13, 2009ல் வலைப்பதிவர்களுக்கான விக்கிப்பீடியா அறிமுகக்கூட்டம் நடைபெறுகிறது. தாங்களும் நண்பர்களும் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
http://tamilwikipedia.blogspot.com/2009/06/blog-post.html
இன்று பயிலரங்கம் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகிகள் என்ற பெயரில் சில புல்லுருவிகள் அட்டகாசம் தாளமுடியவில்லையாமே. புதியத் தமிழ் கற்று கொடுக்கின்றார்களா. இதற்கு ஒரு தலைவர் கனடாவில் இருந்து செயல்படுகின்றாராமே. நீங்கள் ஆங்கிலத்தில் பொழைப்பு நடத்துபவர்கள் தான் இந்த வேலையெல்லாம் செய்கின்றார்கள் என்று சொல்லப்படுகின்றதே. குரூப் பாலிட்டிக்ஸ் வேறு நடக்கின்றதாமே? இவ்வளவையும் தாண்டி தமிழர்களின் உழைப்பை திருடுகின்றீர்களா. நீங்கள் பேர் எடுக்க?
July 1, 2009 8:49 AM
Post a Comment