Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Sunday, August 14, 2022

விக்கிமேனியா மதுரை 2022




உலகம் முழுக்க விக்கிப்பீடியா, விக்கிமூலம் போன்ற இணையத்தளங்களில் எழுதும் தன்னார்வலர்களின் ஆண்டுவிழாக் கூடல் ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஒரு நகரத்தில் நடைபெறும். கடந்த இரு ஆண்டுகளாகப் பெருந்தொற்றுக் காரணமாக உலகில் எங்கும் நேரடிக் கூடல் நடைபெறாததால் இவ்வாண்டு உலகில் ஐம்பது இடங்களில் விக்கிமேனியா கூடல் நடைபெற்றது. இதில் இந்திய அளவில் தேர்வான நான்கு நகரங்களுள் ஒன்று மதுரையாகும். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக அளவிலான விக்கிமீடியர்களின் சந்திப்பொன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. (விக்கிப்பீடியாவில் பங்களிப்பவர் - விக்கிப்பீடியர்; பொதுவாக எல்லா விக்கித் திட்டங்களில் பங்களிப்பவர் - விக்கிமீடியர்)

Saturday, October 26, 2013

அக்டோபர் 28, 2013 - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம் - புதுக்கோட்டை செந்தூரன் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி

தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம் புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 28 அக்டோபர் 2013 அன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
 



மேலும் தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:அக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்

Wednesday, October 2, 2013

கோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் வரும் 11 அக்டோபர் 2013 (வெள்ளிக்கிழமை) அன்று  காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.  ஈடுபாடுள்ள அனைவரும் அழைக்கப்படுகிறீர்கள்.

நோக்கம்
கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்துதல், தமிழ் விக்கிப்பீடியா குறித்த செய்முறை விளக்கம் அளித்தல், ஐயங்களைதல்.

இடம்
கருத்தரங்கக்கூடம் , அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயிலாச்சேரி, கும்பகோணம்-612503

திகதி, நேரம்
11 அக்டோபர் 2013 (11.10.2013), வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை.

நிகழ்ச்சி நிரல்
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • வரவேற்புரை - திரு. அருள் பிரான்சிஸ், முதலாமாண்டு மாணவர்
  • சிறப்புரை: முனைவர்.ச. மணி, முதல்வர், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • தலைமையுரை: பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி
  • இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம்
  • நன்றியுரை: திரு. ப.சிவராமன், முதலாமாண்டு மாணவர்
  • நாட்டுப்பண்
நிகழ்வுப் பொருண்மைகள்
இந்நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
காட்சித்தொடர்பியல் துறை, அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி

தொடர்பு
ஆர்வமுள்ளவர்கள் இங்கு அளிக்கப்பெற்றுள்ள எண்களில் தொடர்பு கொண்டு தங்களின் பெயரைப் பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்கலாம். தொடர்பு எண்கள்: 9047655025, 9750933101

Wednesday, October 27, 2010

விக்கி மாரத்தான்

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்.