2013 தமிழ் விக்கிப்பீடியா தொடர் கட்டுரைப் போட்டி
மேலும் விபரங்களுக்கு:
http://ta.wikipedia.org/wiki/WP:2013contest
தமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு
ஆக்கம்:
நற்கீரன்
at
5:32 PM
0
மறுமொழிகள்
பகுப்புகள்: கட்டுரைப் போட்டி
ஆக்கம்:
நற்கீரன்
at
8:55 PM
0
மறுமொழிகள்
பகுப்புகள்: அறிமுகம், ஊடகங்களில், பரப்புரை
இணையத்தில் தமிழ்/தமிழர் தொடர்பான கட்டற்ற (public domain) பல்லூடக ஆவணங்களை (படங்கள், ஒலிக்கோப்புக்கள், நிகழ்படங்கள்) அதிகரிக்கும் நோக்கில் தமிழ் விக்கியூடகம் ஒரு போட்டியை நவம்பர் 15, 2011 இல் இருந்து பெப்ரவரி 29, 2012 வரை நடத்தியது. இந்தப் போட்டி மிக வெற்றிகரமாக முடிந்துள்ளது. இப் போட்டியில் 15 000 மேற்பட்ட ஆக்கங்கள் பதிவேற்றப்பட்டன. 300 மேற்பட்ட பயனர்கள் கலந்துகொண்டார்கள்.
போட்டிக்கு வந்த அனைத்து ஆக்கங்களும் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போட்டி மிகக் கடுமையாக இருந்தது. இயன்ற வரை தகுதி வாய்ந்த சிறந்த ஆக்கங்களுக்கு பரிசளிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பரிசுகளின் எண்ணிக்கையை கூட்டியுள்ளோம். இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற, ஆனால் பரிசு வெல்லாத ஆக்கங்கள் மதிப்பெண் அடிப்படையில் பரிசு வென்ற ஆக்கங்களுக்கு மிக மிக நெருக்கமாக அமைந்திருந்தன.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை அனுப்பி வைக்கப் பின்வரும் விவரங்களை tamil.wikipedia@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்: 1) சான்றிதழில் இடம் பெற வேண்டிய பெயர் (தமிழில்) 2) முழு அஞ்சல் முகவரி 3) வசிக்கும் நாடு
முதல் பரிசுகள் (தலா 100 $)
* எஸ்ஸார்
* அரவிந்த் ரங்கராஜன்
இரண்டாம் பரிசுகள் (தலா 50 $)
* அறிவழகன்
* ஜாசன்
* ஜோ மனோஜ்
மூன்றாம் பரிசுகள் (தலா 25 $)
* Prinzy555
* Shamli071
* Amshudhagar
தொடர் பங்களிப்பாளர் பரிசுகள் (தலா 75$)
* அன்டன்
* அருணன் கபிலன்
* பார்வதிஸ்ரீ
* தமிழ்ப்பரிதி மாரி
தமிழர் தொழிற்கலைகள் (தலா 75$)
* Jayaseerlourdhuraj
* Balu 606902
பங்களிப்புச் செய்த அனைத்து பயனர்களுக்கும் வெற்றி பெற்ற அனைத்து பயனர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஆக்கம்:
நற்கீரன்
at
9:38 AM
0
மறுமொழிகள்
பகுப்புகள்: ஆவணப்படுத்தல், ஊடகப் போட்டி, பல்லூடகங்கள்