தமிழ் விக்கிபீடியாவில் 10, 000+ கட்டுரைகள் !
தற்போது, தமிழ் விக்கிபீடியாவில் 10, 000+ கட்டுரைகள் உள்ளன.
2005 ஆகஸ்டில் 1, 000 கட்டுரைகள் என்ற முதல் இலக்கை அடைந்த பிறகு, குறுகிய காலத்தில் 10, 000 கட்டுரை இலக்கை எட்டிப் பிடித்திருப்பது தமிழ் விக்கிபீடியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ், தமிழ்நாடு, இலங்கை, இந்தியா, இலக்கியம், கட்டடக்கலை, தமிழ்த் திரைப்படங்கள், நூல்கள், விளையாட்டு முதலிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.
அறிவியல், வரலாறு, புவியியல், உலக நடப்புகள், நடப்பு நிகழ்வுகள் முதலிய தலைப்புகளில் புதிய கட்டுரைகளை உருவாக்கவும் இருக்கிற கட்டுரைகளை மேம்படுத்தவும் தொடர்ந்து உழைத்து வருகிறோம்.
இவ்வேளையில், இன்னும் பலர் தமிழ் விக்கிபீடியாவில் பயனர்களாகவும் பங்களிப்பாளர்களாகவும் இணைந்து இந்தக் கூட்டு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டுகிறோம்.
நன்றி,
தமிழ் விக்கிபீடியர்கள் சார்பாக,
ரவிசங்கர்.
8 comments:
ரவி,
உங்கள் ஆர்வத்திற்கும், உழைப்பிற்கும் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் :)
பிரமிக்கத்தக்க (என்னுடைய அளவில் ஆச்சரியப்படத்தக்க) வளர்ச்சி...
விரைவில் 10,000 ம் 1,00,000 ஆக வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நண்பர்களே
பொதுவிழாக்களில் துண்டுப்பிரசுரமூலம் அதிக தமிழர்களுக்கு இது பற்றிய அறிமுகத்தையும் செய்யலாம். என் பங்கிற்கு ஏதாவது பங்களிப்பு செய்ய ஆசைப்பட்டேன். நிறைய (தேவையில்லாத) வேலைகளைச் சுமந்துகொண்டிருக்கிறேன்.
உங்கள் பணிகளுக்கு மேலாக இவை குறித்த முனைப்புக்கு மீண்டும் வாழ்த்துக்கள்
ரவிசங்கர், விக்கி பசங்க என்ற பதிவில் வரும் இடுகைகளை தமிழ் விக்கிபீடியாவில் சேர்க்கலாமா?
அதற்கு வழிமுறைகள் என்ன என்பது பற்றி விளக்கிச் சொல்வீர்களா?
திரு, பாலா, குறும்பன் - நன்றி.
கானா பிரபா - ஆஸ்திரேலியாவில் நீங்கள் கலந்து கொள்ளும் தமிழர் கூட்டங்களில் தமிழ் விக்கி திட்டங்கள் குறித்து ஓரிரு சொற்கள் எடுத்துரைக்கலாம். பரப்புரைகளுக்கான துண்டுப் பதிப்புக்கான வரைவும் வைத்துள்ளோம். தேவையானால் தருகிறோம்.
இலவசக்கொத்தனார் - தமிழ் விக்கிபீடியாவின் கலைக்களஞ்சிய கட்டுரை நடைக்கும் வலைப்பதிவுக் கட்டுரை நடைக்கும் வேறுபாடு உள்ளதால் விக்கி பசங்க இடுகைகளை அப்படியே ஒரு கட்டுரையாகத் தர இயலாது. வலைப்பதிவுக் கட்டுரையின் சாரத்தைக் கொண்டு புதிதாக ஒரு விக்கிபீடியா கட்டுரை உருவாக்கலாம். அல்லது, பொருத்தமான விக்கிபீடியா கட்டுரைகளில் வெளி இணைப்பாக விக்கி பசங்க கட்டுரைகளை இணைக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, தியோடலைட் குறித்த தமிழ் விக்கிபீடியா கட்டுரையில் ஏற்கனவே விக்கி பசங்க கட்டுரைக்கான வெளி இணைப்பைத் தந்துள்ளேன்.
I have a couple of new user/basic questions...
1. Can I contribute as 'anonymous' for Tamil wikipedia (edit and add entries as a nameless user)
2. Can I generously adapt the entries from Tamil Blogs/Media/magazines (with proper outgoing link/attribution to the source, assuming they are CC copyrights)
3. Can you point me to a sitemap (to locate where a given entry can be added or to verify whether info on an item already exists)
4. Can you give (or drop a link to the URL) on the dummies guide to adding entries in Tamil wiki.
TIA
பாலா -
1. அடையாளம் காட்டாமல் பங்களிக்கலாம். ஆனால், உங்கள் IP முகவரி பொதுப் பார்வைக்காகப் பதியப்படும். பயனர் கணக்கு உருவாக்கினால் IP காட்டப்பட மாட்டாது. உங்கள் சொந்தப் பேரில் தான் பயனர் கணக்கு உருவாக்க வேண்டும் என்றில்லை. பேருக்கு ஏதோ ஒரு புனைப்பெயரில் எழுதலாம். உங்கள் சொந்த விவரங்களைத் தர அவசியமில்லை.
2. இயன்ற வரை அவற்றின் முக்கியமான கருத்துகள், வரிகளை மேற்கோளாகக் காட்டுவதே விரும்பத்தக்கது. இணையத்தில் அத்தளம்,கட்டுரை இருந்தால், அதற்கான இணைப்பாகத் தரலாம்.
3. அகர வரிசையில் கட்டுரைகள்
கட்டுரைகளை நீங்கள் எங்கும் சேர்க்கத் தேவை இல்லை. புதுப்பக்கத்தை உருவாக்குவதற்கான உதவிக் குறிப்பு இங்கு. நீங்கள் உருவாக்கிய பின் பொருத்தமான பகுப்பில் பிற அனுபவமுள்ள பயனர்கள் சேர்த்து விடுவார்கள். தேவைப்படும்போது பிற பயனர்களும் உங்களுக்கு வழிகாட்டுதல் தருவார்கள்.
4. இப்போதைக்கு இந்தப் பக்கம் பாருங்கள். விரைவில் நீங்கள் கேட்ட மாதிரி ஒரு பக்கம் உருவாக்குகிறோம்.
ஆர்வத்துக்கும் கேள்விகளுக்கும் நன்றி.
Post a Comment