Thursday, October 31, 2019

விக்கிப்பீடியாவில் கட்டுரைப் போட்டி

இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கிடையே வரலாற்றில் இல்லாத விறுவிறுப்பான போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஜனவரி 10 2020 வரை நடைபெறும் போட்டியில் சுமார் மூன்று வாரம் கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா முதலிடத்தைத் தக்கவைத்து முன்னேறிக் கொண்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டைப் போல கடைசி நேரத்தில் வெற்றியைத் தட்டிப்பறிக்கும் பிற மொழி விக்கிப்பீடியாக்களும் தமிழைத் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன. ஆர்வமுடையவர்கள் வந்து விக்கிப்பீடியாவில் எழுதித் தோள் கொடுக்கலாம்,


LanguagesArticlesParticipantsLinks
Tamil153147Fountain
Punjabi(Gurmukhi)87231Fountain
Urdu80023Fountain
Bengali79629Fountain
Punjabi(Shahmukhi)5482Fountain
Santali3028Fountain
Hindi30118Fountain
Malayalam1617Fountain
Assamese15015Fountain
Gujarati1136Fountain
Telugu1125Fountain
Odia974Fountain
Marathi7010Fountain
Kannada266Fountain
Tulu265Fountain
Sanskrit94Fountain

என்ன போட்டி?
சுருக்கமாகச் சொன்னால், கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் விக்கிப்பீடியா நடையில் முன்னூறு வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும். அது தான் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி

எப்படி எழுத? தெரியாதே!
இந்தக் காணொளிகளைப் பார்க்கலாம். இந்த ஆவணங்களைப் படிக்கலாம். கூடுதல் சந்தேகங்களுக்கு ஒத்தாசைப் பக்கம்வாட்சப் குழு அல்லது பேஸ்புக் குழுவில் கூடக் கேட்கலாம். 

பரிசு உண்டா?
அதிகக் கட்டுரை எழுதியவர்களுக்கு மட்டும் பரிசு நிச்சயம், தமிழ் விக்கிப்பீடியா குமுகமாக வென்று அனைவருக்கும் பரிசைப் பெற்றுத்தருவது லட்சியம்.

வேறு ஏதாவது உண்டா?
இந்த செய்தி பிடித்திருந்தால் மற்றவர்களுடன் ஷேர் செய்யுங்கள், மறக்காமல் கட்டுரை எழுதி ஸ்கோர் செய்யுங்கள். 

சென்னையில் தொடர்தொகுப்பு நிகழ்வு - நவம்பர் 10 2019 வேளச்சேரி

மதுரையில் தொடர்தொகுப்பு நிகழ்வு நவம்பர் 30 2019 மன்னர் கல்லூரி

சென்னையில் தொடர்தொகுப்பு நிகழ்வு - டிசம்பர் 15 2019 நடக்கவுள்ளது. முன்பதிவுபடிவம்

Tuesday, September 24, 2019

ஒளிப்படப் போட்டி 2019

கீழடி தொல்லியல் செய்திகளையடுத்து நமது பாரம்பரியச் சுவடுகளைத் தேடிப் பார்த்துவிட அனைவருக்குள்ளும் ஒரு ஆர்வம் எழலாம். சிலர் வளைத்து வளைத்து, புராதன இடங்களுக்குச் சென்று படங்கள் எடுத்தும் வரலாம். அவர்களைப் போன்ற புகைப்படக் கலைஞர்களுக்கு வாய்ப்பாக ஒரு சர்வதேசப் போட்டி ஒன்று நடந்து வருகிறது. தமிழகத்தைச் சுற்றியோ, உங்கள் பகுதியைச் சுற்றியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்திய அளவில் 10 பரிசுகளும் அதனைத் தொடர்ந்து சிறந்த படங்கள் சர்வதேச அளவில் மேலும் பல பரிசுகளும் காத்திருக்கின்றன. போட்டியில் கலந்து கொள்ள புகைப்படக் கலைஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை, நுழைவுக் கட்டணமில்லை, உங்களைச் சுற்றியுள்ள புராதன நினைவுச் சின்னங்களின் பட்டியல் வேண்டுமென்றால் இங்கே எடுத்துக் கொள்ளலாம். ஆக ஆர்வம் மட்டும் இருந்தால் போது.

https://www.wikilovesmonuments.org/participate/

இது விக்கிமீடியா அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் "விக்கி நினைவுச்சின்னங்களை விரும்புகிறது" என்ற போட்டியாகும். இதில் உலகில் உள்ள யாரும் கலந்து கொள்ளலாம், நினைவுச்சின்னங்களைப் படமெடுத்து காமன்ஸ் எனப்படும் பொதுவகத்தில் உரிய குறிப்புகளுடன் அதாவது சரியான பெயர், விளக்கம், பகுப்பு என இட்டு தரவேற்றவேண்டும். இப்படி ஒருவர் எத்தனைப் புகைப்படங்களையும் எடுக்கலாம் போட்டிக்கு அனுப்பலாம். நீங்கள் எடுத்த படங்களை மட்டுமே இதில் ஏற்றமுடியும், மற்றவர்களின் படங்களை உங்கள் பெயரில் போட்டிக்குக் கொடுக்கமுடியாது. முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விதி என்னவென்றால் நீங்கள் எடுத்த புகைப்படத்தை கிரியேட்வ் காமன்ஸ் உரிமத்தில் தான் பகிரவேண்டும். இப்போட்டியின் இலக்கே அறிவுச் செல்வம் பொதுவுடைமையாகவேண்டும் என்பதே. அதாவது உங்கள் படத்தை மற்றவர்களும் உரிய மதிப்புடன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த ஆண்டின் போட்டியின் காலம் செப்டம்பர் முழுவதும். எனவே செப்டம்பர் ஒன்றிலிருந்து முப்பதிற்குள் சமர்ப்பிக்கப்பட்டவை மட்டுமே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும். முன்பே நீங்கள் எடுத்த படங்களைக் கூட இப்போது சமர்ப்பிக்கலாம்.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட கடந்த காலப் புகைப்படங்களையும் காணலாம். விக்கித்திட்டங்களில் உங்களுக்கு பயனர் கணக்கில்லை என்றால் உடனே தொடங்குங்கள். பொதுவாகவே எப்போது வேண்டுமானாலும் படங்களையோ, ஒளிக்கோப்புகளையோ தரவேற்றலாம் ஆனால் இக்காலத்தில் ஏற்றினால் போட்டியிலும் பங்கு கொள்ள முடியும். ஒரே இடத்தை வெவ்வேறு கோணங்களில் எடுத்தல், தெளிவான படப்புள்ளியுடன் இருத்தல், வெவ்வேறு ஒளிப் பின்புலத்தில் எடுத்தல் போன்று உங்கள் திறனை வெளிப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கும், செயல்முறைக் காட்சிகளுக்கும் இதைப் பார்க்கலாம்.

https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Monuments_2019_in_India

Monday, June 3, 2019

பயிற்றுநரைப் பயிற்றுவிப்போம் 2019


மே 31 முதல் ஜூன் 2 2019 வரை நிகழ்ந்த பயிற்றுநர் பயிற்றுவிப்போம் நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் திட்டமிட்டபடி நிகழ்ந்தது. அதில் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக அபிராமி நாராயணன் மற்றும் நீச்சல்காரன் கலந்து கொண்டனர். அதில் விவாதிக்கப்பட்ட மற்றும் முக்கியத் தகவல்கள் இப்பதிவில் பகிரப்படுகின்றன.

எந்தத் தலைப்பாக இருந்தாலும் குறிப்பிடத்தக்கமை உள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும். ஒரு தலைப்பின் குறிப்பிடத்தக்கமை ஒவ்வொரு சமூகத்திற்குச் சமூகம் மாறுவதால் அவற்றை அச்சமூகம் விவாதித்து முடிவிற்கு வரலாம். அதுவரை ஆங்கில வழிகாட்டலைப் பின்பற்றலாம்

விக்கி நிகழ்வுகள் இருவகையாகப் பிரிக்கலாம். ஆன்லைன் விக்கி நிகழ்வு என்பது இணையம்வழியாக மட்டும் கலந்து கொண்டு நடத்தப்படும் வேங்கைத் திட்டம், தொடர்தொகுப்பு போன்றவை. ஆப்லைன் விக்கி நிகழ்வு என்பது நேரடியாக சந்தித்து நடத்தப்படும் கூடல், பயிற்சிப்பட்டறை போன்றவையாகும். இவ்வாறு எந்த விக்கி நிகழ்வை நடத்தினாலும் அதன் வெற்றி கட்டுரை எண்ணிக்கையில் இல்லை, அதன் பின்னர் புதியவர்களால் உருவாகும் சமூக வளர்ச்சியே முக்கியம்.

எந்தக் கட்டுரைகளை எழுதலாம், பிரச்சாரமாக இல்லாமல் எப்படி எழுதுவது, நடுநிலைமையுடன் எழுதுதல், நம்பத்தகுந்த மேற்கோள்கள் எவை போன்று விவாதிக்கப்பட்டன. விக்கிப்பீடியா என்பது உண்மைகளையும் எண்ணிக்கைகளையும் மட்டுமே சொல்ல வேண்டும் அதற்கேற்ற கருத்துக்களைக்(interpretation) கொடுக்கக்கூடாது.

ஒரு பயிற்சிக்குச் செல்லும் முன்னர் பயிற்றுநர் என்பவர் விக்கியின் இடைமுகத்தைப் பற்றி நன்கு தெரிந்திருந்தால் மட்டும் போதாது அதன் கொள்கைகளையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். பலரது அனுபவங்களை [https://meta.wikimedia.org/wiki/Learning_patterns இங்கே] காணலாம்.

கீழ்க்கண்ட கருவிகள் மூலம் தேவைப்படும் கட்டுரைகளை உருவாக்கலாம்
http://recommend.wmflabs.org/
https://trends.google.com/trends/
https://stats.wikimedia.org/v2/#/all-projects

GLAM திட்டத்தின் மூலம் ஆவணங்களை மின்னிலக்கமாகவோ, பகிர்ந்துகொள்ளவோ உதவி கோரலாம்
CIS-A2K அமைப்பின் மூலம் இந்திய அளவில் நிகழும் விக்கி நிகழ்வுகளுக்கு ஆதரவைக் கோரலாம்

தொடர்பாடல்:
விக்கியின் நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனிக்க ஆலமரத்தடியைக் கவனிப்பதன் மூலமோ [https://lists.wikimedia.org/mailman/listinfo மின்னஞ்சல்] சந்தாதாரராகப் பதிவுசெய்வதன் மூலமோ தொடர்ந்து விக்கி தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
இரண்டாம்பட்சமாக விக்கியின் சமூகத்தளக் குழுக்களில் இணைந்தும் கவனிக்கலாம்

பயனுள்ள கருவிகள்
http://wikipedia.ramselehof.de/wikiblame.php
https://xtools.wmflabs.org/about
https://petscan.wmflabs.org/

பயனுள்ள சிறப்புப்பக்கங்கள்
https://meta.wikimedia.org/wiki/Special:UrlShortener
https://en.wikipedia.org/wiki/Special:CreateAccount
https://ta.wikipedia.org/wiki/Special:SpecialPages


மேலும் அறிய
https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Train_the_Trainer_Program/2019
https://etherpad.wikimedia.org/p/ttt2019
https://commons.wikimedia.org/wiki/Category:TTT_2019