தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் தொடர் மேம்படுத்தலுக்கு உரியவை. கட்டுரையை விரிவாக்கல், மெய்ப்பார்த்தல், நடை மாற்றி எழுதல், தகவல் சரிபார்த்தல், மேற்கோள் சேர்த்தல், கருத்துக் கூறல், இணைப்புகள் சேர்த்தல், படங்கள், ஒலி நிகழ்ப்பட கோப்புகள் சேர்த்தல் என பல வழிகளில் மேம்படுத்தலாம்.
பல கட்டுரைகள் குறுங்கட்டுரைகளே எனவே மேலும் தகவல்களைச் சேர்த்து விரிவாக்கலாம்.
பல கட்டுரைகளில் தமிழ் எழுத்துகூட்டல் இலக்கண பிழைகள் உண்டு. அவற்றை நீங்கள் மெய்ப்பு பார்கலாம்.
பல பயனர்கள் தங்களது படைப்புகளை கலைக்களஞ்சிய நடைக்கு பொருந்தாத நடையில் இட்டுள்ளார்கள். அவற்றை கலைக்களஞ்சிய நடைக்கு மாற்றி எழுதலாம்.
பல தரப்பட்ட தகவல்கள் பிழையாக தட்டச்சு செய்யபப்ட்டிருக்கலாம், அல்லது இன்றைப்படுத்தாமல் இருக்கலாம் அவற்றை சரி செய்யலாம்.
தமிழ் விக்கிப்பீடியாவின் பல கட்டுரைகள் ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை. ஆனால் அங்குள்ள மேற்கோள்கள் இங்கும் சேர்க்கபப்டவில்லை. அவற்றை சேர்கலாம். புதிய ஆதாரங்களை தேடிச் சேக்கலாம்.
பல தரப்பட்ட விடயங்களைப் பற்றி (எ.கா கலைச்சொற்கள்) விக்கி பயனர்களிடையே கருத்துப்பரிமாற்றம் நடைபெறுவதுண்டு. அங்கு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கட்டுரையை மேம்படத்த உதவலாம்.
முன்னர் சுட்டியபடி இடை, உள், வெளி இணைப்புகளை தந்து மேம்படுத்தலாம்.
படங்கள் சேர்த்தல், ஒலி நிகழ்ப்பட கோப்புக்களை சேர்த்தலும் நல்ல பணிகள்.
தமிழ் விக்கிப்பீடியா பலநூறு பயனர்கள் சிறு பங்களிப்பு செய்வதனால் வளர்வது. எனவே உங்களுக்கு ஏற்ற நேரத்தில் உங்களுக்கு ஈடுபாடன முறையில் இணையம் மூலம் பங்களிக்க வாருங்கள்.
No comments:
Post a Comment