Saturday, October 31, 2009

தமிழ்மணத்துக்கு நன்றி

2009ஆம் ஆண்டு முழுவதுமே தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வு பரப்பும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். தமிழ்மணம் நட்சத்திர வாரத்தின் மூலம் இன்னும் பல புதியவர்களைச் சென்றடைந்திருக்கிறோம். தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் இது வரை திட்ட வலைப்பதிவுகள், கூட்டு வலைப்பதிவுகள் இடம்பெற்றுள்ளனவா தெரியாது. இந்த வாய்ப்பை முன்வந்து நல்கிய தமிழ்மணம் நிருவாகத்தினருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்மணம் ஒரு திரட்டியாக மட்டுமல்லாது, பல்வேறு தமிழ், தமிழர் நலன் சார் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறது. 2005 ஆண்டு முதலே தமிழ் விக்கித் திட்டங்களுக்குத் தமிழ்மணத்தில் தொடுப்புகள் தந்துள்ளார்கள். இரா. செல்வராசு போன்ற தமிழ்மண உறுப்பினர்கள் விக்கிப்பீடியாவில் பங்களிப்பாளர்களாகவும் உள்ளனர். நா. கணேசன் வாய்ப்பு கிடைக்கும் களங்களில் எல்லாம் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்துகிறார். தமிழ்மணம் ஆதரவு அளிக்கும் இணையப் பட்டறைகளில் முனைவர். மு. இளங்கோவன் அவர்கள் தமிழ் விக்கித் திட்டங்களுக்குப் பயிற்சி அளிக்கிறார். சென்னை விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைக்கு, தமிழ்மணம் முகப்பில் அறிவிப்பு இட்டு விளம்பரப்படுத்தி உதவினார்கள்.

இது போல் பல வகைகளிலும் தமிழ்மணம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்கு நல்கியுள்ள ஆதரவுக்கும் தொடரும் பங்களிப்புகளுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ரவி, மற்றும் பிற தமிழ் விக்கிப்பீடியா நண்பர்களுக்கு, வாழ்த்துக்கள். விக்கிப்பீடியா போன்ற, சிறப்பானதும், எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயனுள்ளதுமான திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதிலும், முன்னிறுத்துவதிலும் தனிப்பட்ட முறையில் நானும், தமிழ்மணம் அமைப்பும் மகிழ்ச்சி கொள்கிறோம். ~20000 கட்டுரைகள் என்பது மேலும் விரைவாக வளர்ச்சி பெற்று இரண்டு லட்சம் கட்டுரைகளாக மாறட்டும். பலருக்கும் பயனுள்ள ஒரு மூலமாக விளங்கட்டும். ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் என்னுடைய பங்களிப்புகளையும் தொடர எண்ணி வருகிறேன். விரைவில்...

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நன்றிங்க. உங்களின் மீள் வரவை எதிர்ப்பார்க்கிறோம். கூடவே இன்னும் சில நண்பர்களையும் அழைத்து வாருங்கள் :)

Post a Comment