Sunday, October 25, 2009

வலைப்பதியும் தமிழ் விக்கிப்பீடியர்கள்

வலைப்பதியும் தமிழ் விக்கிப்பீடியர்கள் பட்டியல்:

1. சந்தோஷ்குரு
2. ரவி
3. சிவக்குமார்
4. சந்திரவதனா
5. பாலச்சந்தர் முருகானந்தம்
6. குறும்பன்
7. மயூரன்
8. மயூரேசன்
9. கலை
10. மோகன்தாஸ்
11. செல்வராஜ்
12. தெரன்சு
13. புருனோ
14. kanags
15. சத்தியா
16. நற்கீரன்
17. மணியன்
18. ரகுநாதன்
19. பெ.நாயகி

சிலர் பதிவுகளில் ஒரு பெயரிலும் விக்கியில் ஒரு பெயரிலும் எழுதலாம். சிலர் வலைப்பதிவர்கள் தாம் என்று நாங்கள் அறியாமலே இருக்கலாம். நீங்களும் ஒரு வலைப்பதியும் விக்கிப்பீடியரா? தயவு செய்து, யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால் தங்கள் விக்கி பயனர் பெயர், வலைப்பதிவு முகவரி விவரங்களை வலைப்பதியும் தமிழ் விக்கிப்பீடியர்கள் பக்கத்தில் நீங்களே சேர்த்து விடுங்கள்.

ஆர்வமுள்ள வலைப்பதிவர்கள், இந்தப் பட்டியலில் உள்ள தங்கள் வலைப்பதிவு நண்பர்களைத் தொடர்பு கொண்டு விக்கிப்பீடியா குறித்த தங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி.

15 comments:

சென்ஷி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் விக்கிப்பீடியா குழுவினருக்கு!

RAGUNATHAN said...

நன்றி ரவி :)

ஆயில்யன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

நட்சத்திர வாழ்த்துக்கள் விக்கிப்பீடியா குழுவினருக்கு!

மணியன் said...

தமிழ் விக்கிப்பீடியாவில் 1200க்கு மேலான விக்கிப்பீடியர்கள் பதிந்துள்ளனர். அவற்றில் தமிழில் வலைப்பதிவுகளை வைத்துள்ள சிலரையே ரவி குறிப்பிட்டுள்ளார் ;)

வாழ்த்து கூறிய அன்பர்களுக்கு நன்றிகள்!!

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஆமாம் மணியன். ஒரு சிறு திருத்தம்: பதிந்துள்ள பயனர் எண்ணிக்கை 12000 க்கும் மேல் (1200 அல்ல. தட்டச்சுப் பிழையாக விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்).

தமிழ்மணத்தில் பதிவாகியுள்ள பதிவுகளின் எண்ணிக்கை 6000க்கும் மேல். ஆனால், விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பவர்களோ 20க்கும் கீழ் :( 300 வலைப்பதிவுகளுக்கு ஒரு விக்கிப்பீடியர்.

ஒவ்வொரு மில்லியன் தமிழருக்கும் 0.6 தமிழர் மட்டுமே விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

தமிழ் said...

வாழ்த்துகள்

குறும்பன் said...

இவ்வார விண்மீன் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வாழ்த்துகள்.

ரவி said...

விக்கியில் 800 கட்டுரைகளுக்கு மேல் பதிந்த அண்ணன் தமிழ்நெஞ்சம் பற்றி நீங்கள் தனிப்பதிவு தான் போடவேண்டும்...

கோவி.கண்ணன் said...

பதிவர் ரத்னேஷ் விக்கிபீடியாவில் நிறைய எழுதுவதாக குறிப்பிட்டு இருந்தார். அவர் பெயர் இல்லையே

மணியன் said...

அவர் பெயர் விடுபட்டுள்ளது.அவர் பெ.நாயகி என்ற பயனர் பெயரில் எழுதி வருகிறார்.

கோவி.கண்ணன்,உங்கள் பங்களிப்பு எப்போது துவங்கும் ?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

செந்தழல் ரவி, கோவி. கண்ணன் - சிலர் பதிவுகளில் ஒரு பெயரிலும் விக்கியில் ஒரு பெயரிலும் எழுதலாம். சிலர் வலைப்பதிவர்கள் தாம் என்று நாங்கள் அறியாமலே இருக்கலாம். தயவு செய்து, யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால் தங்கள் விக்கி பயனர் பெயர், வலைப்பதிவு முகவரியுடன் தெரிவுயுங்கள். நன்றி.

கோவி.கண்ணன் said...

//மணியன் said...
அவர் பெயர் விடுபட்டுள்ளது.அவர் பெ.நாயகி என்ற பயனர் பெயரில் எழுதி வருகிறார்.

கோவி.கண்ணன்,உங்கள் பங்களிப்பு எப்போது துவங்கும் ?
//

திரு மணியன் மற்றும் திரு ரவிசங்கர், மறுமொழிக்கு நன்றி.

எனக்கும் விக்கியில் எழுத நெடுநாள் ஆவல் இருக்கிறது. 2010 நல்ல துவக்கமாக அமையும் என்று நினைக்கிறேன்.

விக்கியில் ஆங்கிலத்தில் 25,000,00+ கட்டுரைகள் எப்படி வந்தது, தமிழ் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதனுடன் ஒப்பிட்டு தாழ்வுணர்ச்சி அடையளாமா என்று ஒரு இடுகை போடலாம் என்று நினைக்கிறேன்.
:)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வணக்கம் திரு. கோவி. கண்ணன், உங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம்.

மற்ற இந்திய விக்கிகளுடன் கூட நாங்கள் எண்ணிக்கை அளவில் போட்டி போடுவதோ தாழ்வு மனப்பான்மை கொள்வதோ இல்லை. கட்டுரை தரத்துக்கே முக்கியத்துவம் அளிக்கிறோம்.

பார்க்க: தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு.

முதற்கட்டமாக, தமிழகப் பள்ளி மாணவர்களுக்காவது பயன்படக்கூடிய அடிப்படையான, தரமான, முழுமையான கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்க முயல்வதே நமது நோக்கம். எத்தனை கட்டுரைகள் என்பது முக்கியம் இல்லை.

Post a Comment