Saturday, June 7, 2008

விக்கிபீடியா இல்லை விக்கிப்பீடியா

Wikipedia என்பதை விக்கிபீடியா என்றே இதுவரை தமிழில் எழுதி வந்தோம். தமிழ் ஒலிப்பு இலக்கணப்படி இதை Wikibedia என்றே உச்சரிக்க இயலும் என்பதால், இனி விக்கிப்பீடியா என்று எழுதுவது என முறைப்படி முடிவெடுத்திருக்கிறோம். இனி விக்கிப்பீடியா என்றே எழுதுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

4 comments:

வன்பாக்கம் விஜயராகவன் said...

மடத்தனம். எல்லொரும் - தமிழிலும் ஆக்கிலத்திலும் - விகிபீடியா என்று சொல்கிறார்களே தவிற விக்கிப்பீடியா என்று யாரும் சொல்வதில்லை.

Umapathy (உமாபதி) said...

மாற்றம் தமிழுக்கு நல்லது. ஆங்கிலத்தில் விக்கிபீடியா என்றால் தமிழில் அப்படியே அழைக்கவேண்டும் என்றில்லை. ஆங்கிலத்தில் யாழ்ப்பாணத்தை ஜவ்ப்னா (Jaffna) ஜவ்ப்னா என்று யாராவது எழுதுவார்களா?. நமக்கு நமது இலக்கணப்படி எவ்வாறு உச்சரிக்கமுடியுமோ அவ்வாறுதான் உச்சரிக்கலாம். இவ்வாறான துணிசசலான முயற்சிகளுக்கு முதலில் என் பாராட்டுக்கள். தேமதுரத் தமிழ் தேசமெங்கும் பரவட்டும்.

வன்பாக்கம் விஜயராகவன் said...

இரண்டு அதிக மூச்சுகள் (syllables) , இரண்டு அதிக எழுத்துகள் அதிகமாக்கி கழுத்தறுத்தா, துணிச்சலான முயற்சியா?பரவுவது தமிழ், தேமதுரத் தமிழல்ல.

கடும் விமர்சகர் வெங்குடு said...

அண்ணன் உமாபதி அவர்களுக்கு... முதலில் நாம் தமிழை வளர்ப்பதாக எண்ணி நமது தமிழை மற்றவர்கள் கிண்டல் அடிப்பது போன்று செய்ய வேண்டாம். ஏனெனில் உதாரணமாக ஜோசப் என்ற ஒரு ஆங்கிலப் பெயரை தமிழாக்கம் செய்தால் அதனை குறைந்தபட்சம் சோசப் என்றாவது கூறலாம். ஆனால் நாம் யோசேப்பு என்று கூறுவது அப்பெயரின் தன்மையே இல்லாது வேறு பெயரில் ஒலிக்கிறது. அதனால் நாம் தமிழில் பெயர்ப்பு செய்யும் போது அதிக பட்சம் ஒத்துபோக கூடிய எழுத்துகளைக் கையாளுவது நல்லது. மேலும் விக்கிபீடியா , விக்கிப்பீடியா இரண்டுமே பொருத்தமானது (தமிழை பொறுத்த வரை ! ) ஆனால் இதனை தமிழ் வார்த்தை என் கருதி படிக்கும் போது உச்சரிப்பானது Wikipedia விலிருந்து வேறுபடும்

Post a Comment