Tuesday, November 25, 2008

அனைத்துலக மொழிகள்

அனைத்துலக மொழி என்று ஒரு மொழியைத் தீர்மானிப்பது அம்மொழியை பேசுபவர்களின் எண்ணிக்கை, துறைகளில் ஒரு மொழிக்கு இருக்கும் செல்வாக்கு, வரலாற்று, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் ஆகிய காரணிகள் ஆகும். இன்று ஆங்கிலமே அதி முக்கியத்துவம் கொண்ட அனைத்துலக மொழியாக இருக்கிறது. ஜோர்ஜ் வெபர் (George Weber) என்பவரின் ஆய்வுக் கட்டுரைக்கிணங்க[1] பின்வரும் மொழிகளின் அடுக்கமைவு அமைகின்றது.

1. ஆங்கிலம்
2. பிரெஞ்சு
3. ஸ்பானிய மொழி
4. உருசிய மொழி
5. அரபு மொழி
6. சீன மொழி
7. ஜேர்மன் மொழி
8. ஜப்பானிய மொழி
9. டச்சு மொழி
10. இந்தி/உருது

எண்ணிக்கைக்கு கூடிய முக்கியத்துவம் தந்தால் [[வங்காள மொழி]]யை முதல் பத்துக்குள்ளும், போர்த்துகீச மொழி பின்னும் தள்ளப்படலாம்.

தமிழின் நிலை


தமிழ் முதல் 20 மொழிகளுக்குள் வரலாம். எண்ணிக்கை அடிப்படையில் தாய்மொழியாக கொண்டவர்கள் அடிப்படையில் 15வது நிலையிலும், இரண்டாம் மொழியாக கொண்டவர்களையும் சேர்க்கையில் 18வது நிலையிலும் இருக்கின்றது. பிற இந்திய மொழிகளைக் காட்டிலும் நான்கு நாடுகளில் (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்) அரசு ஆதரவு இருக்கின்றது. மேலும், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும் குறிப்பிடத்தக்க தமிழ்ச் சமூகங்கள் இருக்கின்றன.

பொதுவான அடிப்படைகளில் தமிழை ஒரு அனைத்துலக மொழியாக கருத முடியாது. தமிழ் எந்த ஒரு அனைத்துலக அமைப்பிலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மொழி இல்லை. தமிழர்களை அல்லது தெற்கு ஆசியரைத் தவிர வேறு எந்த இனத்தவரும் தமிழை பேசுவது இல்லை. தமிழ் மொழி எந்த ஒரு துறையிலும் அனைத்துலக மட்டத்தில் பயன்படுத்தப்படுவது கிடையாது. எனவே தமிழை ஒரு அனைத்துலக மொழியாகக் கருத முடியாது. அதை ஒரு சமூகம் சார்ந்த மொழியாகவே கருத முடியும்.



இந்தக் கட்டுரைய மேம்படுத்த இங்கே தமிழ் விக்கிப்பீடியாக்கு செல்லுங்கள்:

2 comments:

கோவி.கண்ணன் said...

//தமிழர்களை அல்லது தெற்கு ஆசியரைத் தவிர வேறு எந்த இனத்தவரும் தமிழை பேசுவது இல்லை. தமிழ் மொழி எந்த ஒரு துறையிலும் அனைத்துலக மட்டத்தில் பயன்படுத்தப்படுவது கிடையாது. எனவே தமிழை ஒரு அனைத்துலக மொழியாகக் கருத முடியாது. அதை ஒரு சமூகம் சார்ந்த மொழியாகவே கருத முடியும்.//

ஆங்கிலம் தவிர்த்து ஏனைய மொழிகளும் அப்படியே, உலகில் (எண்ணிக்கை அடிப்படையில்) மிகுதியாக பேசப்படும் மொழி சீனம் தான், ஆனால் சீன மொழியை சீனர்கள் தவிர்த்து யாரும் பேசுவதில்லை.

வணிகம் தொடர்பில் பேசப்படுபவையே அனைத்துலக மொழி. அந்த வகையில் ஆங்கிலம், ஸ்பானிஸ், ப்ரெஞ்ச் அதன் பிறகு ஜெர்மனி ஆகியவைகளுக்கு முதன்மையான இடம் உண்டு

நற்கீரன் said...

உங்கள் கருத்துக்கு நன்றி கோவி. கண்ணன்.

ஆங்கிலம் மட்டுமல்ல. பிரெஞ்சு, ஸ்பானிஸ், உருசியன் போன்றவை பல இன மக்களால் பேசப்படுகின்றன. சீனம் கூடி ஜப்பான், கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளில் நல்ல செல்வாக்கு பெற்றது.

வணிகம் பயன்பாடு மட்டுமே முக்கிய தகுதியாக கருதப்படமுடியாது.

கல்வி (அறிவியல், தொழில்நுட்பம்), அரசியல் போன்றவையும் முக்கிய தகுதிகள்.

தமிழைக் கூட பிற இந்திய மக்கள், அரபு வணிகர்கள் கற்றார்கள். ஆனால் அவர்கள் தமிழர் அடையாளத்துக்குள் இலகுவாக உள்வாங்கப்படுகிறார்கள்.

Post a Comment