Tuesday, September 29, 2009

ரொறன்ரோ தமிழ் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு

தமிழர்கள் மத்தியில் கணினிப்பாவனையை ஊக்குவிக்கும் நோக்கிலும் கணினியில் தமிழ் பாவனையை இலகுபடுத்தும் நோக்கிலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி (04/10/2009)பிற்பகல் 4மணிக்கு கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் கருத்தரங்கும் அறிமுக நிகழ்வும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில்,
* தமிழ் விக்கிபீடியா
* உத்தமம் - தமிழ் இணைய மாநாடு 2009
* வலைப்பூ Blogs
* தமிழ் மென்பொருள்கள்
ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கும்,
* ’புத்தகம்’ இணையத்தளம் – ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச புத்தகக்கடை
* தமிழ் தட்டச்சு சேவை
போன்றவற்றின் அறிமுக நிகழ்வும்,
*பரிசு அட்டை – புத்தகம் இணையம்
*தமிழ் மென்பொருள்கள்

ஆகியவற்றின் விற்பனையும் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 416 273 5811 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அன்புடன்
புலம்பெயர் தமிழர் உலகம்.

4 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

கருத்தரங்கு சிறக்க வாழ்த்துகள்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி
தமிழ் இணையப் பயிலரங்கக் குழுவிற்காக

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

நல்ல முயற்சி.விக்கிபீடியாவினால் தமிழ்கூறு நல்லுலகம் பெறுகிற பெறுமானங்கள் மற்றும் இன்னும் எவ்வகையில் அதனை மேலும் செழுமைப்படுத்தலாம் போன்ற ஆய்வுகள் அவசியமானவை. திட்டுகளாகி விடுபட்டுபோன மானிடரை இணயத்தால் ஒன்றிணைத்து மனிதர்களை மனிதர்களோடான பரஸ்பர நெருக்கத்தைப், புரிந்துணர்வை வளர்க்க இவ்வாறான சந்திப்புகள் அவசியமாகின்றன. அதற்காக முயல்கிற தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.
தமிழ்சித்தன்

விருபா - Viruba said...

\\ ’புத்தகம்’ இணையத்தளம் – ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச புத்தகக்கடை \\

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

மாலன் said...

செய்தி அறிய மகிழ்ச்சி. உங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துகள்
அன்புடன்
மாலன்

Post a Comment