தமிழ் விக்கிப்பீடியா உதவிப்பக்கங்கள்
விக்கிப்பீடியா அனைவரும் பங்கேற்று மேம்படுத்தக் கூடிய கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்தவும் , விக்கிப்பீடியாவிற்கு எப்படி கட்டுரைகள் எழுதுவது, விக்கிப்பீடியா சமூகத்தில் எப்படி பங்குகொள்வது போன்ற வினாக்களுக்கான விடையை தந்திடும் வகையில் பல உதவிப் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.
தமிழ் இடைமுகம் காணமுடியாதவர்களுக்கு இங்கு வழிகாட்டப்படுகிறது. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் கேள்விகள் பக்கங்களில் தமிழில் தட்டச்சுவது எப்படி என்றும் புதிய கட்டுரையாக்கம் குறித்தும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை காணலாம்.
தமிழ் விக்கிப்பீடியா மீடியாவிக்கி என்ற மென்பொருளை அடிப்படையாகக்கொண்டு இயங்குவது.உரையை வடிவமைப்பதற்கு உரிய ஆணைகள் வழமையான உலாவியில் பயன்படுத்தப்படும் மீயுரை குறிகள் போலன்றி சற்றே மாறுபடுகின்றன.காட்டாக, தடித்த எழுத்துகளுக்கு,மீயுரையில் < b > அச்சொற்றொடரின் < /b > இருபுறமும் பயன்படுத்தினால் இங்கு ''' என்னும் குறிகளுக்குள் அவை இடப்பட வேண்டும். இத்தகைய அடிப்படை ஆணைகளுக்கான உதவியை இங்கு பெறலாம்.தவிர இந்த நினைவுக் குறித்தாளும் உதவும்.இந்த மீடியாவிக்கி மென்பொருளைப் பற்றி நீங்கள் அறிய விரும்பினால் ஆங்கிலத்திலுள்ள இந்த கட்டுரை உதவும்.
விக்கிப்பீடியா:உதவி பக்கத்தில் (முதற்பக்கத்தில் உள்ள இடது வழிகாட்டிபட்டையில் உள்ள உதவி இணைப்பு மூலம் நீங்கள் சென்றடையலாம்) பயனர்களுக்கு எழக்கூடிய பல ஐயங்களுக்கு விளக்கம் அளிக்கக்கூடிய உதவிப்பக்கங்கள் மற்றும் பல்லூடக பயிற்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பொதுவாக தொழில்முறை கட்டுரைகளை தமிழாக்கம் செய்யும்போது ஆங்கிலச்சொற்களுக்கீடான தமிழ்சொற்களைத் தேடுவது இயல்பு. தமிழ் அகரமுதலி,கலைச்சொல் ஒத்தாசை மற்றும் கலைச்சொல் செயல்பாடுகள் ஒருங்கிணைவு, கலைச்சொல் கையேடு என இவை உங்கள் தமிழாக்கத்திற்கு துணை புரியும்.தவிர,தமிழ் விக்கிப்பீடியா ஓர் கலைக்களஞ்சியமாதலால்,இங்கு பயிலும் நடை குறித்த கையேடுகள் பட்டியலை சமுதாய வலைவாசலில் காணலாம்.விக்கிப்பீடியாவின் உள்ளடக்கம் நடுநிலைநோக்கோடு,தகுந்த சரிபார்க்கத் தக்க சான்றுகளுடன்,முழுமையும் காப்புரிமை அற்ற ஆக்கங்களுடன் அமைக்கப்பட வேண்டும்.இதற்கான வழிகாட்டல்களை இங்கு காணலாம்.இத்தகைய வழிகாட்டலைப் பின்பற்றிய கட்டுரையொன்றை ஆக்கிட விருப்பம்,ஆனால் எதைப்பற்றி எழுதுவது என்று சிந்திக்கிறீர்களா ? எவ்வாறு பங்களிக்கலாம் என இங்கு காண்க. இனி உங்கள் பங்களிப்பை துவங்க இந்த பயிற்சிப்பக்கங்கள் சரியான இடம்.
இவை எதிலும் உங்களுக்குரிய ஐயம் தீர்க்கப்படவில்லையாயின்,ஒத்தாசை பக்கம்,மற்றும் உசாத்துணை பக்கங்களில் தேடலாம்;மற்றும் வினா எழுப்பலாம்.ஆலமரத்தடி என பெயரிடப்பட்டுள்ள சமூக விவாதமேடையில் யோசனைகள் மற்றும் விளக்கங்களை விவாதிக்கலாம்.இவற்றையும் மீறி,தன்னார்வலர்களால் கட்டப்படும் இந்த கூட்டு முயற்சியில் நீங்கள் பங்மேற்றிட,ஒவ்வொரு விக்கிப்பீடியரும் உதவிட ஆர்வத்துடன் உள்ளனர்.
1 comment:
மிக நல்ல அறிமுகம். விக்கிப்பீடியாவில் உதவிப் பக்கங்களை மேம்படுத்தும் தங்கள் பணி சிறப்பானது.
Post a Comment